ஆன்மா Vs. மனம் – வித்தியாசம் என்ன ?

எவன் தன் நஃப்ஸ் எனும் ஆன்மாவை அறிந்தானோ அவன் தன் நாயனை அறிந்தான் – நபிமொழி

ஆன்மா – மனம் இவை இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?

மகனே, ஆன்மா என்பதை கடல் என வைத்துக்கொண்டால் அதன் மேலெழும் அலைகளை மனம் எனக்கொள்ளலாம்.

இந்த அலைபாயும் மனதை அமைதிநிறைந்த உன் ஆன்மாவில் ஓயச்செய்ய முயல்வதே தியானம்.

நன்றாக சிந்தித்துப்பார் , நீ இரவில் உறங்குகிறாய் அதிகாலையில் விழிக்கிறாய் உன்னை உறங்கவும் விழிக்கவும் செய்தது எது? எது உன்னை உறங்கவும் விழிக்கவும் செய்ததோ அதுவே உன் ஆன்மா, உன் ஆன்மாவைப்பற்றி நீ இப்போது சிந்திக்கிறாயே அதுவே உன் மனம்.

இவ்வுலகில் யாவும் அழியும் உன் ஆன்மாவைத்தவிர….
உன் மனமெனும் குரங்கை அடக்கி உன் நஃப்ஸ் எனும் ஆன்மாவை அமைதியடையச் செய்துகொள்.
அப்போது தான் நீ நஃப்ஸே காமிலா என்னும் சம்பூர்னம் அடைந்த ஆன்மாவாய் இறைவனிடம் மீளமுடியும்.

– மு.அ.ஹைதர் அலி யகீனுல்லாஷா

Leave a Reply

Your email address will not be published.