காதிரியாவும் ஜிஸ்தியாவும் இருவேறு தரீக்காக்கள் அல்ல

பகுதாத் நகரத்தின் பூங்காவனமாக அமைந்து விட்டிருந்த ஹழ்ரத் குத்புல் அக்தாப் முஹியித்தீன் அப்துல் காதிர் ஜீலானி(ரலி)அவர்களின் ரவ்ழா ஷரீப் முன் தலை கவிழ்ந்த நிலையில் நின்றிருந்தார் ஹழ்ரத் க்வாஜா முயீனுத்தீன் ஜிஸ்தி என்னும் இளவல்.
இரு விழிகளை மூடி விவேகத்தின் பார்வையைத் திறந்து ஹழ்ரத் குத்பு நாயகத்தோடு உசாவிக் கொண்டிருந்தார்கள். இரவின் போர்வையில் உலகம் உறங்கிக் கிடந்தது.

“மைந்தரே! ஹிந்த் என்னும் நாட்டிற்கு நீர் அனுப்பப்படுவதின் அவசியத்தை நீர் அறிந்தீரா?
அருமை நாயகம்(ஸல்)அவர்கள் தங்களுடைய சன்னிதானத்தில் நற்செய்திகள் காத்திருப்பதாக கூறினார்கள்.
“ஆம், மைந்தரே உமக்கு நற்செய்திகள் பல உண்டு. நற்செய்தியை நான் கூறுமுன் ஹிந்துஸ்தான் என்னும் புண்ணிய பூமியின் வரலாறு உமக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

ஆண்டகையின் ஆன்மாவுக்கருகில் அமர்ந்தபடி ஹிந்துஸ்தானத்தைப் பார்த்தார்கள். கால தூரம் கடந்த அவ்வகக் காட்சியில் இந்தியாவின் ஆன்மாவை அவர்கள் கண்டார்கள்.

ஆதம்(அலை)அவர்களின் தோற்ற பூமி, மனித நாகரிகத்தின் ஆரம்பநிலம்.ஆயிரமாயிம் ஆண்டுகளாக அறிவையும், கலையையும், ஞானத்தையும் வளர்த்து வரும் புண்ணிய தேசம்!

இந்தியாவின் ஆன்மா இஸ்லாத்தின் வருகைக்காகத் தவித்துக் கொண்டிருந்தது.

ஹழ்ரத் முயீனுத்தீன் ஜிஸ்தி(ரலி)அவர்கள் ஆதி மனிதர் ஆதம்(அலை)அவர்களின் சொந்த பூமியிலே இறைவனின் ஏக ஞானத்தை எடுத்துச் சொல்லப் போகும் பெருமிதத்தோடு அவர்கள் எழுந்தார்கள்.

பின்னர் மீண்டும் விழிகளை மூடிபடி, “எஜமானரே இந்தியாவின் ஆன்மாவை வெற்றி கொள்வதில் எனக்கு என்றும் தங்கள் துணை வேண்டும்.
ரவ்ழா ஷரீபிலிருந்து மெல்ல நகைக்கும் குரல் ஒலித்தது. அஞ்சாதீர் மைந்தரே! எனது துணை என்றுமுண்டு. எனினும் உமக்கென்று ஒரு சொந்தத் துணையையும் அனுப்ப இறை நாட்டம் உண்டு.!”

“நீர் ஆரிய பூமியிலிருப்பீர்! உமக்கொரு துணை திராவிட பூமியிலே வந்து அவருவார். இந்தியாவின் ஆன்மீக பிரிபாலனத்திலே அவர் உமக்கு துணையாயிருப்பார். கிழக்காசிய நாடுகளின் பிரிபாலனமும் அவரிடம் ஒப்படைக்கப்படும். மேலும் அவர் ஆதி நபி ஆதம்(அலை)அவர்களின் பூமிலே பிறப்பதால் அவரிடம் இஸ்லாத்தின் ஞானப் பாதைகள் அனைத்தும் சென்று சங்கமிக்கும்!

அவர் வெளிப்படையான அற்புதங்களை நிகழ்த்துவோரில் இறுதியானவராகவும் குத்பாகவும் இருப்பார். உம்மீது நாம் கொண்ட நேசத்திற்காக எமது இரு மைந்தர்களின் நேர்வாரிசுகளிலேயே அவரைத் தோன்றச் செய்து இறைவன் உமக்கவரை துணையாக்குவான்!”
ஹழ்ரத் முயீனுத்தீன் ஜிஸ்தி மன நெகிழ்வோடு நிமிர்ந்து அமர்ந்தார்கள்!

“அவர் பெயர் ஸையத் அப்துல் காதிர் ஷாஹுல் ஹமீது பாதுஷா(ரலி)அண்டகை அவர்கள். அவர் தங்குமிடம் இந்தியாவின் தென்கோடியிலுள்ள நாகூர்!” என கௌஸ் நாயகம் முன்னறிவிப்பும் வாழ்த்து கூறினார்கள்.
ஜிஸ்தியாவும் காதிரியாவும் இரண்டு தரீக்காக்களல்ல இரண்டும் ஒன்றுதான்.

Leave a Reply

Your email address will not be published.