கௌதுகள் நாயகத்தின் திருப்பாதங்களை முதலில் சிரசில் பெற்ற சீலர் யார் ?

ஹழ்ரத் ஹிந்துல் வலி கவாஜா முயீனுத்தீன் ஜிஸ்தி(ரலி)அவர்கள் ஷாம் நாட்டு குகை ஒன்றில் தங்கி தவத்தில் ஈடுபட்டிருந்த கால கட்டம் அது.

ஹழ்ரத் கவாஜா முயீனுத்தீன் ஜிஸ்தி(ரலி) அவர்கள் மனம் திடுக்கிட்டவர்களாக அந்த அற்பதக் காட்சியைக் கண்டு கொண்டு நின்றார்கள். இரண்டாயிரம் மைல்களுக்கு அப்பால் பகுதாத் நகரத்தின் ஈத்கா மைதானத்தில் ஹழ்ரத் குத்புல் அக்தாப் முஹியித்தீன் அப்துல் காதிர் ஜீலானி(ரலி)அவர்கள் பயான் செய்துக் கொண்டிருந்தார்கள்.

மைதானத்தில் கூடிருந்த கூட்டத்தில் ஆயிரமாயிம் ஷெய்குமார்கள், மாபெரும் வலிமார்கள், இராக் நாட்டு மன்னர்களும், பொதுமக்களும் கூடிருந்தார்கள்.

கௌஸ் நாயகம் அவர்களுடைய பயானில் கூட்டம் தன்வயமிழந்திருந்த நேரம் அவர்கள் திடீரென எழுந்து.

“இறைபாதையில் வெற்றிப் பெற்று முக்தி பெறுவோர் ஒவ்வொருவரின் தோளின் மீது என்னுடைய திருப்பாதங்கள் இரண்டும் பதிக்கப் பெரும்! காலம் உள்ளவும் இந்த அறிவிப்பு நிகழ்வது நிச்சயம்!” இவ்வாறு கூறி உட்கார்ந்தார்கள்.

உடனே கௌஸ் நாயகத்தின் பாதம் அருகில் இருந்த ஷெய்கு ஷெய்கு அலி பின் ஹித்தி(ரலி)அவர்கள் தம் தோளைச் சாயித்தார்கள்.

இராண்டாயிம் மைல்களுக்கு அப்பால் மலைக் குகையுல் நிலை குலைந்து நின்றிருந்த ஹழ்ரத் ஹிந்துல் வலி(ரலி)அவர்கள் சுயவுணர்வற்ற மறு கணமே தம் தலையைப் பூமியில் வைத்து, “இறைவா! எஜமானுடைய திருப்பாதங்கள் இந்த அடியானின் சிரத்தின் மீதாகட்டும்” என்று மூன்று முறை உரக்க சப்தமிட்டார்கள்.

இதோ ஷெய்கு அலி பின் ஹித்தி(ரலி) அவர்களிடைய தோளைத் தொடுவதற்கு முன் அந்த திருப்பாதங்கள் இரண்டாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்த இளைஞர் முயீனுத்தீன் ஜிஸ்தி அவர்களின் அழகான சிரத்தை முத்தமிடுகிறது. கணப்பொழுதில் நடந்தது.

குத்பு நாயகத்தின் முதல் பாதம் ஹிந்துல் வலி ஹழ்ரத் முயீனுத்தீன் ஜிஸ்தி(ரலி) அவர்களுக்கே!

Leave a Reply

Your email address will not be published.