சூஃபிகளின் பார்வையில் – நரகம்,சொர்க்கம்,முக்தி,பிறப்பு,மறுபிறப்பு

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி இராஜிவூன சஹாதா – நிச்சயமாக நாம் அல்லாஹ்விலிருந்தே வந்தோம் அல்லாஹ்விடமே மீள்வோம் என்பது திருக்குர்ஆன் வசனம்.

அதன் பொருள், மேகம் கடலில் முகர்ந்து வரும் நீர், மழையாய் பொழிந்து நதியாய் விரைந்து, கடலில் சென்று கலந்துவிடுகிறது என்பதுதான்.

கடல் நீரும், நிலத்தடி நீரும், மழை நீரும் – நீர்தான், என்பது போல இறைவனிலிருந்து வந்தது இறைவனுடைய ஆன்மாதான், பூமியில் மனிதர்களாக வாழும் போதும் அது இறைவனுடைய ஆன்மாதான்.

இறைவனிடத்தில் திரும்பும் போதும் அது  இறைவனுடைய ஆன்மாவேதான்.

எனவேதான் யூதருடைய பிரேதம் துாக்கி செல்லப்பட்ட சூழ்நிலையில் அந்த பிரேதத்தில் இருந்தது இறைவனுடைய ஆன்மா என்பதாக கருதி பெருமானார்(ஸல்) மரியாதை செய்ததாக அவர்களைப் பற்றிய ஹதீஸ் மொழி ஒன்று கூறுகிறது.

இறைவனிடமிருந்து தோன்றிய ஆன்மா மீண்டும் மீண்டும் பிறந்து தன் மயக்கம் தீர்ந்து தானே இறைவன் (அனல் ஹக்)  என்று உணரும் போது முக்தி அடைகிறது. இதனை இந்து மதமும் புத்த மதமும் ஜைன மதமும் ஜெனனம் எடுப்பது என்று கூறுகிறது.

யூத கிருஸ்துவ இஸ்லாமிய மதத்தினர், ஆண்டவன் மனிதனில் புகுத்திய ஆன்மா நன்மை தீமைகள் புரிந்து, அதன் பாவங்கள் நரகத்தில் கழுவப்பட்டு சுவர்க்கத்தில் புகுந்து கொள்கிறது என்று வேறு விதமாக சொல்கின்றனர்.

பிறப்பு மறுபிறப்பு, முக்தி நரகம் சொர்க்கம், நரக சொர்க்கத்திற்கு அப்பால்பட்ட அழிவற்ற இறைநேச நிலை என்பதெல்லாம் ஒரே விவகாரத்தைப் பல்வேறு கோணங்களிலிருந்து பார்க்கும்போது ஏற்படும் தோற்றங்களாகும்.

ஆகவே ஞானம் தேடும் மனிதன் நேற்று இன்று நாளை என்பதையும், அருகில் துாரத்தில் என்ற குழப்பத்தையும் விட்டு தெளிவு பெற வேண்டும்.

 

பார்க்க – காட்டு பாபா ஃபக்ருத்தீன் ஷஹீத் ஒலியுல்லாஹ்

ஆசிரியர் – ஞான மகான் அஷ்ஷெய்க் ஹைதர் அலி யகீனுல்லாஷா

பக்கம் – 120