‘சூஃபி’ – நபிகள் நாயகம் (ஸல்லாஹூ அலைஹி வஸல்லம்)

நபிகள் நாயகம் (ஸல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் நபித்துவம் பெற்ற கடைசி சிலபல ஆண்டுகளை ஆராய்ந்து, அவர்கள் கூறிய ஏவல் விலக்கல்களை அவர்கள் கூறியவாறே கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு கூட்டங்களாக பிரிந்து நாம் இன்று செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம் (..இறைவனே யாவும் அறிந்தவன்..).

ஆனால் ஒரு 25 வயதுடைய இளைஞர், தன்னுடைய மணைவி மக்கள் சொந்தம் செல்வம் யாவையும் விட்டும் விலகி ஜபலே நுார் என்ற மலைக்குன்றின் ஹிராக்குகையை நோக்கி ஓடிய காரணத்தை ஆராய்ந்தறிய யாரும் முன்வரவில்லை.

நபிகள் நாயகத்தை ‘சூஃபி’ என அழைத்த அந்த சுவாரஸ்யமான நிகழ்வு இதோ உங்கள் சிந்தனைக்காக?…

…இறைவனின் அழைப்பை ஏற்று ஹிராமலைப் பொதும்பில் தவம் மேற்கொண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போக்கை காதலி கதிஜா
பொருந்தி கொண்டார். குளிரும் வெய்யிலும் பாராமல் குகைவரை சென்று கோமானுக்கு சேவை செய்தார்.

நாட்கள் மாதங்களாக காலம் கடந்து செல்கிறது.பலநாள் தொடர் மழையால் பாலைவனம் பனிக்கடலான ஒரு விடியாவிடியலில் ஓடிச்சென்று காதலரைத் தேடிய கதிஜாவையும் நேச முகம்மதையும் கண்டு நகைக்கின்றார் அபுஹப்ஸா. ஆம் அவர் திருக்குர்ஆன் வர்ணிக்கும் அத்துவித சித்தாந்தி. ஏக இறைகாதலர்களான ஹனிஃப்களில் ஒருவர்.

அவர் அண்ணல் முகம்மதை முதன் முதலாக சூஃபி என அழைத்தார். கம்பளியால் போர்த்தப் பட்டவர் – மெய்ப்பொருளை தேடும் ஞானி என்பது அதன் பொருளாகும்.