ஞானிகள்

[important]நாகூர் நாயகம் தங்களுடைய அந்திமக் காலத்தில் நாகூரில் ஆற்றிய சொற்பொழிவின் ஒரு பகுதி….[/important]

நல்லறிவார்களுடைய சகவாசத்தை தேடி அடையுமாறும், அல்லாஹ்வுடைய அடியார்களின் அடக்கஸ்தலங்களுக்குச் சென்று ஜியாரத் செய்யுமாறும் உங்களுக்கு இதோபதேசம் செய்கிறேன்.
நல்லடியார்களுடைய அடக்கஸ்தலங்களுக்கு சென்று ஜியாரத் செய்வதால் உங்களுடைய காரியங்கள் செவ்வைப் பெறும்.

ஷரீஅத் என்னும் சட்டரீதியான அனுஷ்டானங்களை ளாஹிரான கல்வியையுடைய ஆலிம்களிடமிருந்தும், தரீக்கத்தின் ஞானங்களை ஷெய்குமார்களிடமிருந்தும் கற்கின்ற நல்லடியான், ஹக்கீகத்தான விளக்கங்களை நல்லடியார்களின் தலங்களிலிருந்துதான் இல்ஹாமின் வாயிலாக அடையமுடிகிறது.

‘எவனொருவன் என் ஒலியைப் பற்றி புறம்பேசுகின்றானோ அவனுக்கெதிராக போர்தொடுக்க வாளை உயர்த்திவிட்டேன்’ என்று ஏக நாயன் மொழிவதாக ஹதீஸ் கூறுகிறது.

‘இவ்வுலகில் அடைப்பதையும், திறப்பதையும் நல்லடியார்களைக் கொண்டே இறைவன் நடத்தாட்டுகிறான்’ என்று ஞானிகள் கோமான் முஹ்யித்தீன் ஆண்டகையவர்கள் அருள்புரிந்திருக்கிறார்கள்.
எனவே அடியார்களை நாடிச் செல்வதை மறுக்கும் விதண்டா வாதத்துக்கு செவி சாய்க்காதீர்கள்.

‘அல்லாஹ் அவன் ஏகன், எங்கும் நிறைந்தவன் – யாரையும் பெறாதவன் – யாராலும் பெறப்படாதவன் அவனைப் போன்று இணையாகவும் யாருமில்லை’ என்று திருமறை இறைவனை வர்ணிக்கிறது.
ஏகனாகிய அவனை ஒன்றுபடுத்தி வணங்கும் விஷயத்தில் நீங்கள் சிந்திக்க வேண்டியுள்ளது. தெளிவான ‘இல்ஹாம்’ உதிக்காதவரை இந்த ஒன்றுப்படுத்துதலிலிருந்து நீங்கள் சருகிவிழ நேரிடும். இத்தகைய நேரங்களில் நல்லடியார்களின் தரிசனமே உங்களுக்கு கைக்கொடுக்கும்.

‘தஹயர்த்தும் பில் உமூரி பஸ்த்தயீனுாமின் அஹலில் குபூரி’ – கருமங்களில் திகைப்படைந்து விடுவீர்களேயானால் கபுருகளை உடைய அவ்லியாக்களைக் கொண்டு உதவி தேடிக்கொள்ளுங்கள்’ – என்று எம்பெருமான் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். எனவே நீங்கள் இம்மை, மறுமை காரியங்களில் திகைப்படைவீர்களேயானால் அடியார்களுடைய வாசலை நோக்கிச்செல்லுங்கள்.

மெய்யன்பர்களே , அல்லாஹ்வின் நல்லடியார்களின் சகவாசத்தால் உங்களுக்கு ஏற்படும் பலன் இவ்வளவுதான் என்று வரையறுத்துக்கூறமுடியாது. ஹஜ்ரத் ஸாலிஹ் (அலை) அவர்கள் ‘எவரொருவர் அல்லாஹ்வின் நல்லடியாரை நினைவு கூறுகிறாரோ அவர்மீது இறையருள் பொழியப்படுகிறது’ என்றும், ‘உங்களுடைய முடிவு அவர்களுடைய முடிவைப்போல் ஆவதற்காக, ஆண்டவனுடைய நல்லடியார்களை நினைவு கூர்ந்திடுங்கள்’ என்றும் கூறியுள்ளார்கள்.

நுாலுக்கு நன்றி – காருண்ய ஜோதி நாகூர் பாதுஷா நாயகம்.

Leave a Reply

Your email address will not be published.