‘ஞான தீட்சை’ – ‘முரீது’ என்றால் என்ன?

ஷரீஅத் என்னும் சன்மார்க்க சட்டதிட்டங்களை ஒழுங்குடன் கடைபிடித்து நடக்கின்ற நல்லடியான் அல்லாஹ் ஆகிய தன் ஆண்டவனின் மீது தனக்கிருக்கின்ற தேட்டத்தின் காரணமாக தரீக்காவின் பாதையை நாடி வருகிறான்.அங்கு புதிய அனுபவங்களை காண்கிறான்.புதிய ஞானங்களைப் பெறுகிறான்.

‘அவர்கள் அவனை நேசிக்கிறார்கள். அல்லாஹ்வாகிய அவன் அவர்களை நேசிக்கின்றான்’ – என்று திருக்குர்ஆனில் இறைவன் தன் அடியார்களின் இலக்கணத்தைப் பற்றி மிக அழகாக கூறுகிறான். இந்த இறைநேசத்தின் ஆரம்பம்தான் குருசிஷ்ய நேசமாகும்.

குருசிஷ்ய உறவின் முதல் நிலையான ‘ஞான தீட்சை’ – ‘முரீது’ என்பது உலகிலுள்ள ஒவ்வொரு மதத்திலும் உள்ளது. எனினும் இஸ்லாமிய சன்மார்க்கத்தில் தரீக்காவில் அதற்கு பல சட்டதிட்டங்கள் உண்டு.

இந்த தரீக்கா என்னும் ஞானப்பாதையை நாடி வருபவர்களுக்கு ‘அர்ஷ்’ ஆகிய அல்லாஹ்வின் இருக்கையின் வாசல் திறந்து கொள்கிறது.