நலமோங்கும் நாகூர் தர்கா

நாகூர் தர்கா ஷரீபில் அன்றாட நிகழ்வுகள் – ஆண்டு முழுதும் நடைபெறும் விசேஷங்கள் – தர்கா கட்டிடங்களின் சிறப்புகள்:

 •  நாகூர் காதிர் ஒலி நாயகத்தின் சன்னதி உள்ளே 6 வெள்ளி கதவுகள் 1 தங்க கதவு மொத்தம் 7 கதவுகள்.
 • ஆண்டகையின் சன்னதி திறந்திருக்கும் நேரம் அதிகாலை 4.20 முதல் 7.00 மணி வரை.மாலை 6.00 மணி முதல் இரவு 10.00மனி வரை,அதாவது சூரியன் உதிக்கும் முன்பும் மறைத்தவுடனும் சன்னதி திறக்கப்படும்.
 • தினமும், காலையிலும் மாலையிலும் ,மழை,காற்று, புயல் என்றாலும் வெடி குண்டு முழங்க புறாக்கள் பறந்து செல்ல சன்னதி திறக்கப்படும்.
 • ஆண்கையின் தலைமாட்டில் உள்ள தோட்டத்தில் பூக்கும் மலர்கள் பறித்து அதை நூலில் சதர் கட்டி பத்து வயதுக்கு உள்பட்ட பாலகனால் ஆண்டகையின் அடக்க ஸ்தலம் (மஜார்) மீது போடப்படும்.
 • நாகூர் காதிர் ஒலி நாயகத்தின் சன்னதி திறந்த 15 நிமிடத்தில் முன் சன்னதியில் உள்ள, தண்ணீர் நிறைந்திருக்கும் கண்ணாடி குவளையில் ஒரு ஸ்பூன் மட்டும் தேங்காய் எண்ணெய் ஊற்றப்பட்டு அதில் ஏற்றப்படும் விளக்கு சுமார் 3 மணி எரியும்.
 • காதிர் ஒலி நாயகத்தின் சன்னதியில் இருந்து மகனார் ஷாஹ் செய்யது முஹம்மது யூசுப் சாஹிபு ஆண்டவர்களின் வாசலுக்கு வெள்ளி தட்டத்தில் பூ வைக்கப்பட்டு 10 வயதுக்கு உட்பட்ட பாலகன் சிரசின் மீது வைத்து பூ போடப்படும்.
 • மகனார், சின்ன ஆண்டவர், மருமகள் அம்மா சாஹிபா ஆகியோர் வாசலில் தினமும் விளக்கு ஏற்றிய பிறகுதான் சன்னதிகள் திறக்கப்படும்.
 • சன்னதி திறக்கும் முன் 5 நிமிடம் முன்பாக நான்கு ஆடவர்கள் நடுமன்றத்தில் அசா கோல் கையில் பிடித்துவெள்ளை ஆடை அணிந்து சிப்பாய்களாக நிற்பார்கள்.
 • ஆண்டகையின் கால் பாதம் வைக்கப்பட்டுள்ள தங்க பெட்டி ஜாதி, மதம், பேதம் இன்றி நாடிவரும் யாத்திரிக பெருமக்களுக்கு ஆசீர்வாதமாக தலையின் மீது வைக்காப்படும்.
 • காதிர் ஒலி நாயகத்தின் சன்னதியில் உள்ளே ஆண்கள் மட்டும் செல்ல முடியும்.
 • நாகூர் காதிர் ஒலி நாயகத்தின் சன்னதியின் மேல் ஆண்டகை அணிந்த நீல கல் மோதிரம் பதிக்கப்பட்டு உள்ளது.
 • ஆண்டகையின் சன்னதி திறந்த உடன் காலையிலும், மாலையிலும் வெள்ளி சட்டியில் ஆடவர் ஒருவரால் சாம்பிராணி போடப்படும்.
 • வெள்ளிக்கிழமை மட்டும் பகலில் சன்னதி திறக்கப்படும் – (காலை 12 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை).
 • ஆண்டகையின் மஜார் மேல் உள்ள தங்கப் போர்வை ஆண்டு தோறும் உரூஸ் தினம் முன் இரவு 8 மணி அளவில் யானை மேல் பழநியாண்டிப் பிள்ளை குடும்பத்தை சேர்ந்த வம்சா வழியினரால் ஊர்வலமாக கொண்டு வரப்படும்.
 • அந்தப் போர்வை ஒரு ஆண்டுக்குப் பின் சின்ன ஆண்டவர் யூசூப் தாதா நாயகத்தின் மஜார் ஷரீபின் மீது சந்தனம் பூசிய பின் போர்த்தப்படும் (துல் ஹஜ் பிறை 2ம் நாள்).
 • சைய்யிதா சுல்தான் பீவி அம்மா அவர்களின் உரூஸ் தினம் ஷாபான் பிறை-10, அப்போது சின்ன ஆண்டவர் மேல் போர்த்தப்பட்ட போர்வை அம்மா சாஹிபா அவர்களின் மஜார் ஷரீபின் மீது போடப்படும்.
 • சின்ன ஆண்டவர்களின் மகனார் காட்டு பாவா பக்ருதீன் சஹீது ஒலியுல்லாஹ் அவர்களின் உரூஸ் ரபியுல் ஆகீர் பிறை-15 – அன்று அம்மா சாஹிபா மீது போடப்பட்ட போர்வை ஷெ ஒலியுல்லாவின் திருமயம் காட்டு பாவா பள்ளி வாசலிலுள்ள மஜார் ஷரீபில் போடப்படும்.நாகூர் நாயகத்தின் தவ வலிமையால் பிறந்த அருட்புதல்வர் சின்ன ஆண்டவர் – செய்யது யூஸூப் சாஹிப் ஆண்டகையின் சமாதி மேல் பகுதியில் அவர்கள் கையில் அணிந்த மோதிரக் கல் பதிக்கப்பட்டு உள்ளது.
 • அம்மா வாசல் மேல் பகுதியில் பதித்துள்ள கண்ணாடி கட்டை, ஆண்டகை சில்லடியில் தவம் இருந்த போது கடலில் மூழ்கிய டச்சு கப்பலை காப்பாற்ற வீசிய கண்ணாடி.
 • தர்காவின் உள்ளே வெளிப்புற நுழைவு வாயில்கள் 4 உள்ளன.அவை அலங்கார வாசல், கால்மாட்டு வாசல், தலைமாட்டு வாசல், கிழக்கு வாசல் என்று அழைக்கப்படுகிறது.
 • தர்கா ஷரீப் உட்புறம் 19 கேட் உள்ளது,இதில் பெரிய ஆண்டகையின் மஜார் எதிரில் உள்ளது ஸ்ரீ பழநியாண்டிப் பிள்ளை அவர்களால் வேண்டுதளுக்காகப் போடப்பட்ட செம்பு கேட்டு ஆகும்.
 • தர்கா ஷரீப் சுத்தம் செய்யும் பணியில் ஆண்கள் மட்டும் பங்கேற்பார்கள்.
 • தலைமாட்டு தோட்டம்: இங்கு செய்வினை, ஷைத்தான் மற்றும் பல்வேறு உடல் மன வியாதிகளுக்கும் மூலிகை பச்சை இலை சாறு காலையிலும், மாலையிலும் வழங்கப்படும்.
 • முதுபக் ஷரீப் – ஆண்டகையின் மருமகள் வாழ்ந்த இடம் ஆகும். இங்கு அவர்களின் கால்பாத அடையாளம் உள்ளது.இது பெண்கள் வேண்டுதலுக்காக தங்கும் தனி இடமாகும்.
 • நாகூர் ஆண்டகை அவர்கள் மறைந்தவுடன் பீர் மண்டபம் என்று அழைக்கப்படும் இடத்தில் வைத்து தொழுகை நடத்தப்பட்டது.
 • நாகூர் தர்காவில் அமைந்துள்ள யா ஹுசைன் பள்ளி என்ற இடத்தில் தான் ஹஜரத் பாதுஷா நாயகம் மறைந்த பின் அவர்களது புனித உடல் குளிப்பாட்டப்பட்டது , இந்த தண்ணீர் ஓடி விழுந்த இடமே இன்று தர்கா குளமாக உள்ளது.
 • நாகூர் ஆண்டவர்கள் மறைந்த பின் முதன் முதலில் மீனவ சமுதாயத்தை சேர்ந்த பக்தர்கள்தான் மேலே ஓலை மட்டையால் கூரை வேய்ந்து, மஜாரை ஒழுங்குபடுத்தி சுற்றுச்சுவர் எழுப்பினார்கள்.
 • தஞ்சை மகாராஜா அவர்களின் வம்சா வழியினரால் ஆண்டு தோறும் உரூஸ் தினம் அன்று இரவு 11.30 மணி அளவில் குதிரையின்மேல் பட்டு போர்வை எடுத்துவந்து, ஆண்டகையின் சமாதி (மஜார்) மேல் அப்போர்வை போர்த்தப்பட்டு பின்னர் 5 நிமிடத்தில் எடுக்கப்படும்.
 • ஆண்டகையின் மஜார் ஷரீபில் பொது மக்கள் அனைவரும் நடுவில் நின்று தரிசனம் செய்ய கூடாது. ஆண்கள் , பெண்கள் என இரு பக்கமும் ஓரமாக நின்றுதான் எஜமான் காதிர் ஒலி நாயகத்தை தரிசிக்க வேண்டும்.
 • சையிதா சுல்தான் பீவி அம்மா அவர்களின் மஜார் (கதவு) பூட்டியவுடன் தங்க சாவி ஷாஹ் செய்யது முஹம்மது யூசுப் சாஹிபு ஆண்டவர் சன்னதி உள்ளே வைக்கப்படும். சின்ன ஆண்டவர் சன்னதி பூட்டியவுடன், தங்க சாவியை பெரிய ஆண்டகை சன்னதி உள்ளே வைக்கப்படும். ஆண்டகையின் கதவு பூட்டியவுடன் மிக சுத்தமாக பச்சை துணியில் எப்போதும் தங்க சாவி சுற்றி வைக்கப்படும். இது தினமும் காலையிலும், இரவிலும் நிகழ்கின்ற நடைமுறை பழக்கமாகும். சாவியை பொது மக்கள் பார்க்க அனுமதிக்கப்படும்.
 • நாகூர் ஆண்டவர்கள் கால கதியடைந்து நூற்றைம்பது வருடங்களுக்கு பின்னர் தஞ்சையில் ஆட்சி புரிந்த மராட்டிய மன்னர் பிரதாப் சிங், குழந்தை வரம் கேட்டு நாகூர் தர்பாரிலே வந்து நின்றார்-அடுத்த வருடமே அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. மன்னரால் 31 அடி உயரத்தில் வானுயர கட்டப்பட்ட மனோரா பெரிய மனோரா என்று அழைக்கபடுகிறது.
 • தர்கா வளாகத்தின் தென் மேற்கில் அமைந்திருக்கும் சாகிபு மனோரா ஆண்டவர்களின் பேரரும் சின்ன எஜமான் செய்யத் யூசுப் நாயகத்தின் மூன்றாவது மைந்தருமான சுல்தான் கபீர் நாயகத்தின் காலத்திலேயே கட்டப்பட்டதாகும். செஞ்சியில் வாழ்ந்த புகழ் மிக்க வர்த்தகர் இபுராஹிம்கான் என்பவர் நேர்ச்சை நிறைவேறியதின் காரணமாக இதனை கட்டுவித்தார். அவரது காரியதரிசிகளாக மீரான் ராவுத்தர், மதாறு ராவுத்தர் என்று இரு பெருமக்கள் முன்னின்று இந்த மனோராவை உருவாக்கினார்.
 • மூன்று வாசல்களிலும் வழங்கப்படும் சந்தனம், பூ, மற்றும் வெற்றிலை ஆகியவை தீரா வியாதிகளுக்கு அருமருந்தாகவும், தாதா வாசலில் தொங்கும் சங்கிலியை கழுவியத் தண்ணீர் ஆயுளை நீட்டுவிக்கும் அமிர்த சஞ்சீவியாகவும் உள்ளது.
 • நாகூர் தர்கா ஷரீபில் 24 மணி நேரமும் பாத்திஹா,யாசின், மௌலீது, குர் ஆன் , மன்ஜில் என்று ஏதாவது ஒன்று யாராவது ஓதி கொண்டுதான் இருப்பார்கள்.
 • பெரிய ஆண்டகையின் கந்தூரி விழாவிற்கு 40 நாள் முன் சாந்து வேலைகள் தொடங்கும் விழா நடைபெறும்.
 • கொடி ஏற்றுதல் – 5 நாட்கள் முன்னதாக சிங்கப்பூரில் இருந்து நாகைக்கு கொடி கொண்டு வந்து துஆ ஓதப்படும்.
 • ஜமாதுல் அவ்வல் பிறை 26 அன்று கொடி மரம் (பாய் மரம்) ஏற்றுதல் நடை பெரும்.
 • ஜமாதுல் ஆகிர் பிறையின் முற்பகல் கொடி ஊர்வலம்: நாகை முஸ்லீம் ஜமாதினரால் பல்வேறு அலங்கார ஊர்திகளில் அணைத்து மதத்தினறும் ஒன்றுகூடி நாகையில் இருந்து நாகூருக்கு கொடி ஊர்வலம் வந்து 5 மனோராக்களில் கொடி ஏற்றுதல் நடைபெரும்.
 • ஜமாதுல் ஆகிர் பிறை 8:நாகூர் தர்கா அலங்கார வாசலில் வான வேடிக்கை நடைபெறும்.
 • ஜமாதுல் ஆகிர் பிறை9:மூன்று நாள் உண்ணா நோன்பு தவம் இருக்கும் பக்கிர்களின் சர்குருவை பீர் வைக்குதல்.
 • ஜமாதுல் ஆகிர்-பிறை 10 இரவு நாகையில் 8 மணி அளவில் சந்தன கூடு புறப்பட்டு முக்கிய வீதி வழிகளில் வரும் போது பிரதான சாலைகளின் இரு புறத்தில் நிற்கும் அனைத்து மதத்தினரும் நினைத்த காரியம் நிறை வேற வேண்டி சந்தனக் கூடு மேல் பூ வீசுவார்கள். மறுநாள் அதிகாலை 4.30 மணி அளவில் சந்தனம் பூசப்படும்.
 • ஜமாதுல் ஆகிர் -11 மாலை துஆ ஓதி பீர் கடற் கரைக்கு ஏகுதல்.
 • ஜமாதுல் ஆகிர் -12 அதிகாலை சுபுஹு தொழுகை முடிந்த பின் ராத்தீப் துஆ பாத்திஹா நடை பெரும்.
 • ஜமாதுல் ஆகிர் -14 இரவு 8.30 மணிக்கு குர் ஆன் ஹதியா செய்து கொடி இறக்குதல்.
 • இந்த 14 நாள்களுக்கும் தினமும் ஒருமணி நேரத்துக்கு ஒருமுறை வெடி குண்டு போடப்படும். அதிகாலையில் ஐந்து மினாராகளிலும் கொடி ஏற்றுதல் நடைபெரும். மாலையில் ஐந்து மினாராக்களில் கொடி இறக்கி வேறு கொடி மாற்றுதல் நடைபெறும்.
 • ஆண்டகையின் தலை மாட்டில் சந்தனம் அரைக்க பெரிய இடம் உள்ளது. அங்கு 7 நபர்களால் தூய எண்ணத்துடன்,தூய உள்ளத்துடன், பிறை 2 முதல் 9 வரை சந்தனம் 7 நாள் அரைத்து தயாரிக்கப்படும்.
 • தர்கா ஷரீப் உள்ளே தங்கி இருக்கும் ஐந்து ஜமா பக்கீர்மார்கள், ஆண்டகையின் சீடர்கள் ஆவார்கள். 1.பானுவாஜமா 2.பீர் ஜமா 3.ரிபாய் ஜமா 4.மலங்கு ஜமா 5.ஜலாலியா ஜமா, இவர்கள் நாகூர் கொடி ஏற்றுதல் முதல் 40 நாள் தர்காவில் தங்குவார்கள்.
 • பிறை-1 முதல் பிறை-14 வரை குர் ஆன் ஓதுதல் நடைபெரும்.
 • நாகை முஸ்லீம் ஜமா அத்தார்கள் அவர்களால் சந்தனம் பூசும் முஹல்லி, முத்தவல்லி, தர்கா பரம்பரை கலிபா -மேனேஜிங் டிரெஸ்டி அவர்களை அழைத்து வந்து சந்தனம் பூசப்படும். பூசிய பின் வீடு வரை அழைத்து வருவது நாகை முஸ்லீம் ஜமா அத்தார்கள் தான்.
 • சின்ன எஜமான் உரூஸ் : முக்கியமான சிறப்பு வேண்டுதலுக்காக பல பொருட்களையும் அலங்கார வாசலில் பந்தல் கட்டி அமைத்து துல்ஹஜ் பிறை -1 இரவு கொடி ஏற்றுதல் மேலும் ஜாதி, மதம் பேதம் இன்றி அனைத்து மக்களும் பல்வேறு பொருள் கட்டுவார்கள். பிறை 13 அரபா கழித்தவுடன் பந்தல் பிரிக்கப்படும்.
 • துல்ஹஜ் பிறை-1 குர் ஆன் ஓதி இரவு மௌலீது மஜ்லீஸ் நடைபெறும்.
 • துல்ஹஜ் பிறை-2 குர் ஆன் ஓதி இரவு மௌலீது மஜ்லீஸ் நடைபெறும்.
 • துல்ஹஜ் பிறை-2 மாலை அசர் தொழுகைக்கு பின் 5 மணி அளவில் ஹஜ்ரத் யூசுப்தாதா (ரலி) மஜாரில் புனித சந்தனம் பூசுதல்.
 • துல்ஹஜ் பிறை-3 குர் ஆன் ஹதியா செய்து மௌலீது நடைபெறும்.
 • ஷாபான் பிறை -10 செய்யது சுல்தான் பீவி அம்மா சாஹிபா அவர்களின் பேரில் குர் ஆன் ஓதி, மௌலீது ஷரீப், போர்வை போட்டு, பூ சதர் போடப்படும்.
 • தர்ம சத்திரம்: திரு நாகூர் ஆண்டவர் துணை -திரு பழனியாண்டி பிள்ளை சென்னப்பட்டணம் தர்ம சத்திரம் -1913 என்று பெயரிடப்பட்ட புனித பயணிகளுக்கான இலவச தங்குமிடம் நாகூர் ரயில் நிலையத்தின் அருகில் உள்ளது.

 

 • நாகூர் ஆண்டவர்களும் நான்கு திசை தொடர்புகளும்:
 1. தெற்கே ஹாஜி நூர்சாஹிபு தைக்கால்,நாகை ரோட்டில் நாகூர் எஜமான் ஜியாரத் செய்த புனித இடமாகும்.மேலும் முஹர்ரம் -6 ஹிஜ்ரத் நாள் பிறை மாலை தர்காவிலும் ஜியாரத் நடைபெறும். சபர் மாதம் பிறை -10ல் மாலை கொடி ஏற்றுதல்,19ல் உரூஸ் நடைபெறும்.
 2. கிழக்கே சில்லடி:தர்கா ஷரீப் நாகூர் ஆண்டவர் அவர்கள் 40 நாட்கள் சில்லா(தவம்) இருந்த இடம் இங்கு கடலில் மூழ்கவிருந்த டச்சு நாட்டு கப்பலையும் பயணிகளையும் காப்பாற்றி கரை சேர்த்தார்கள். சபர் மாதம் பிறை -1ல் கொடி ஏற்றுதல்,10ல் உரூஸ் நடைபெறும்.
 3. வடக்கே வாஞ்சூர் தர்கா ஷரீப் நாகூர் காரைக்கால் ரோட்டில் 5 கி மீ தூரத்தில் ஹஜரத் 40 நாட்கள் பூமிக்கு உள்ளே சில்லா (தவம்)இருந்து பல அற்புதங்கள் நிகழ்த்திய இடம்.இங்கு ரஜப் மாதம் பிறை 1ல் கொடி ஏற்றுதல்,10ல் உரூஸ் நடைபெறும்.
 4. மேற்கே மேல நாகூர் தர்கா ஷரீப் .நாகூரில் இருந்து 3 மைல் கல் தொலைவில் உள்ளது மேல நாகூர் அம்மா சாஹிபா சுல்தான் பீவி அவர்களின் தகப்பனார் ஹஜரத் செய்யது க்வாஜா  மக்தூம் (ரலி) அவர்கள், மற்றும் குடும்பத்தினர்கள் அடக்கம்: ஜமாதுல் அவ்வல் பிறை -16ல் கந்தூரி.