ஞானிகளின் மெய்மொழிகள்

‘நான் அல்லாஹ்வைத் தவிர வேறு எதனையும் பார்க்கவில்லை’ -ஹஜ்ரத் அலீ (கர்) அவர் எப்படி இருப்பாரெனின், அவரது முகம் நண்பனை நோக்கியே இருக்கும் ! இவர் எப்படி இருப்பாரெனின், இவரது முகம் நண்பனது முகமாகவே இருக்கும் ! ~மஸ்னவீ ஷரீஃப் மௌலானா ஜலாலுத்தீன் ரூமி (ரலியல்லாஹூ அன்ஹூ) எங்கும் புகழோங்கிய எனது நாமம் அப்துல் காதிர் சம்பூர்ண ஞான அம்சமான முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்கள் எனது அருமைப் பாட்டனார்! ஆதம் (அலை) உண்டாவதற்கு முன்பே இறைவனின் […]

Continue reading


ஆன்மா Vs. மனம் – வித்தியாசம் என்ன ?

எவன் தன் நஃப்ஸ் எனும் ஆன்மாவை அறிந்தானோ அவன் தன் நாயனை அறிந்தான் – நபிமொழி ஆன்மா – மனம் இவை இரண்டிற்கும் என்ன வித்தியாசம்? மகனே, ஆன்மா என்பதை கடல் என வைத்துக்கொண்டால் அதன் மேலெழும் அலைகளை மனம் எனக்கொள்ளலாம். இந்த அலைபாயும் மனதை அமைதிநிறைந்த உன் ஆன்மாவில் ஓயச்செய்ய முயல்வதே தியானம். நன்றாக சிந்தித்துப்பார் , நீ இரவில் உறங்குகிறாய் அதிகாலையில் விழிக்கிறாய் உன்னை உறங்கவும் விழிக்கவும் செய்தது எது? எது உன்னை உறங்கவும் […]

Continue reading


தோள் கொடுத்த துாய நபி

மக்கமாநகரின் வெற்றிக்குப்பின்னர் மதினத்து மாநபியாம் மாதவமாமணியாம் கண்மணி நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒருவர் ‘அல்லாஹ்வின் துாதரே.. நான் ஒரு ஏழை, எனக்கு இருக்க இடமில்லை’ என முறையிட்டு நின்றார். நபி (ஸல்) அவர்கள், அவரை அழைத்துக் கொண்டு கஃபாவின் பக்கம் வந்தார்கள். ‘இதோ இந்த இடத்தில் ஒரு வீட்டைக் கட்டிக்கொள்ளும்’ என ஓரிடத்தை சுட்டிக்காட்டினார்கள். கூறியதுடன் நிறுத்திக் கொள்ளவில்லை, அந்த ஏழைமனிதர் தம் வீட்டிற்குச் சுவர் எழுப்பமுனைந்த போது மண்குழைத்துக் கொடுத்தார்கள், மண்பதையை வாழ்விக்க வந்த மாநபி(ஸல்) […]

Continue reading


முஹ்யித்தீன் ஆண்டகையின் உபதேசம்-1

மகனே… சகிப்புத் தன்மை என்ற தலையணையின் மீது தலைவைத்து, இறைநாட்டம் என்ற பாயில் படுத்து விதிவசத்தின் பாதச்சுவட்டில் ஓய்வுகொண்டு, ஆண்டவனது வரவை அமைதியோடு எதிர்பார்த்திரு, நிச்சயமாக நீ அவனது அருட்திருக்கருணையை அடைந்து அனுபவிப்பாய். இந்த ஒருபாடமே உனக்குப்போதும்.~முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரலியல்லாஹூ அன்ஹூ)

Continue reading


பாக்தாத்தின் இராஜரிஷி – முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரலி)

அவதரித்த நாள், கி.பி 1078 – ம் ஆண்டு மார்ச் மாதம் 19-ம் தேதி ஹிஜ்ரி 471-ம் ஆண்டு ரமலான் பிறை முதல் நாள் திங்கட்கிழமை அதிகாலை. அவதரித்த இடம் காஸ்பியன் கடலுக்குத் தெற்கே பாரசிகமொழி வழங்கிய தபரிஸ்தான் மாநிலத்தில் ஜீலான் எனும் புனித நகரின் புரநகர்ப் பகுதியான நீஃப் என்ற திருத்தலம். குர்ஆன் முழுவதையும் மனப்பாடம் செய்து முடித்த போது வயது 7. உயர் கல்விக்காக ஜுலான் நகரை விட்டு பக்தாத் மாநகருக்கு புறப்பட்டபோது வயது […]

Continue reading