ஹழ்ரத் காட்டு பாபா ஃபக்ருத்தீன்(ரலி) அவர்களின் மனமாற்றம்

வங்க நெடுங்கடலின் ஓரமாய் தெற்கிலிருந்து வடக்கு நொக்கி நடந்து கொண்டிருந்தார் ஹழ்ரத் காட்டு பாபா ஃபக்ருத்தீன்(ரலி). திடீரென அவர் எழுப்பிய கூக்குரல் தொடுவானின் எல்லைவரை சென்று எதிரொலித்தது. “எங்கு சென்றீகள் காதிர் ஒலி நாயகமே! தாதா ஷாஹுல் ஹமீது நாதரே! எங்குதான் மறைந்திருக்கிறீகள்?” ஷாஹே யூசுப் தாதா நாயகத்தின் தலைச்சனாகிய மைந்தர் ஹழ்ரத் காட்டு பாபா ஃபக்ருத்தீன்(ரலி)அவர்களின் குரல் நிமிடத்துக்கு நிமிடம் ஓங்கி ஒலித்தது. “எனது பாட்டணாரே இறைவனின் குத்பாகிய இறை ஆட்சியாளரே! அறியா பாலப் பருவத்திலேயே […]

Continue reading


திருவண்ணாமலையார் கோவிலில் மெய்ஞானம் போதித்த நாகூர் ஆண்டகையின் பேரர் – காட்டு பாபா பக்ருதீன் (ரலி)

தஞ்சை அரசர் அச்சுதப்பர் தனது அமைச்சரிடம் தாழ்ந்த குரலில் “அமைச்சரே அங்கு இஸ்லாமிய மதபிரச்சாரமா நடைப்பெருகிறது? திருவண்ணாமலையார் கோவில் சத்திரத்திலா?. அமைச்சர் தாழ்ந்த குரலில் கூறினார், ” இல்லை அரசே யாரோ ஒரு சிறுவர் உரத்த குரலில் மெய்ஞானம் பேசுகிறார். இஸ்லாத்தின் வேதநூலான குர்ஆனின் வசனங்கள் பேசும் வினோதனமான அந்த குரல் யாருடையது? அரசர் ஆச்சரியத்துடன் கூட்டத்தை ஆராய முற்ப்பட்டப்போது கூட்டத்தின் நடுவாய் ஒரு பாறையின் மீது பச்சை தலைபாகையும் வெள்ளை சட்டையும் சராயும் அணிந்து தெய்வீகக்களையுடன் […]

Continue reading


நாகூர் நாயகம் தன்னில் தானாகி பெற்ற ஆன்ம தரிசனம்

குவாலியர் – பாழடைந்த பள்ளிவாசல் முற்றத்தில் நிசப்தத்தின் நடுவில் இளவல் ஹழ்ரத் ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகம் அவர்கள் பஜ்ர் தொழுகையை முடித்து கண்ணை மூடி தியானத்தில் அமர்ந்தார்கள். அவர்களின் எண்ணங்கள் ஜவ்ன்பூரில் காட்சி தந்த மஜ்தூப் ஹழ்ரத் கதிருத்தீன் கத்தாலி(ரலி)அவர்களின் மீது கவிழ்ந்தது மஜ்தூப் அவர்களின் போதனையான பார்வையில் பார்க்கும் முராகபா முஷாஹிதா என்னும் தியானத்தில் மனம் லயிக்கத் தொடங்கியது. ஆம் சமாதி நிலையில் ஒன்று படமுனைந்த இளவல் அண்ணல் பாதுஷா நாயகம் அவர்கள் தன்முன் […]

Continue reading


கௌதுகள் நாயகத்தின் திருப்பாதங்களை முதலில் சிரசில் பெற்ற சீலர் யார் ?

ஹழ்ரத் ஹிந்துல் வலி கவாஜா முயீனுத்தீன் ஜிஸ்தி(ரலி)அவர்கள் ஷாம் நாட்டு குகை ஒன்றில் தங்கி தவத்தில் ஈடுபட்டிருந்த கால கட்டம் அது. ஹழ்ரத் கவாஜா முயீனுத்தீன் ஜிஸ்தி(ரலி) அவர்கள் மனம் திடுக்கிட்டவர்களாக அந்த அற்பதக் காட்சியைக் கண்டு கொண்டு நின்றார்கள். இரண்டாயிரம் மைல்களுக்கு அப்பால் பகுதாத் நகரத்தின் ஈத்கா மைதானத்தில் ஹழ்ரத் குத்புல் அக்தாப் முஹியித்தீன் அப்துல் காதிர் ஜீலானி(ரலி)அவர்கள் பயான் செய்துக் கொண்டிருந்தார்கள். மைதானத்தில் கூடிருந்த கூட்டத்தில் ஆயிரமாயிம் ஷெய்குமார்கள், மாபெரும் வலிமார்கள், இராக் நாட்டு […]

Continue reading


கண்மணி நாயகம்(ஸல்) அவர்கள் அஜ்மீர் க்வாஜா நாயகத்தை அழைத்தபோது

பலநாள் பயணத்துக்குப் பின்னர் ஹழ்ரத் உதுமான் ஹாரூனி(ரலி)அவர்களும் ஹழ்ரத் கவாஜா முயீனுத்தீன் ஜிஸ்தி(ரலி)அவர்களும் அண்ணலெங் கோமான் முஹம்மத் முஸ்தபா(ஸல்)அவர்களின் சன்னிதானத்தில் வந்து நின்றார்கள். மதினா நகர் இரவின் மடியில் உறங்கிக் கிடந்தது. பெருமானாரின் சன்னிதானத்தை ஒளிவெள்ளத்தால் நிறைத்துக் கொண்டிருந்தன. குரு ஹழ்ரத் உதுமான் ஹாரூனி(ரலி)அவர்கள் குனிந்து சிரம் பணிந்திட உடனே சீடர் ஹழ்ரத் கவாஜா முயீனுத்தீன் ஜிஸ்தி(ரலி)அவர்களும் பணிவின் உயர்வாக தன் சிரம் பணிந்து மனம் உருகி ஸலாம் கூறி நின்றார்கள். “ஜீவனுள்ள சன்னிதானத்தில் மைந்தரே! நீர் […]

Continue reading


காதிரியாவும் ஜிஸ்தியாவும் இருவேறு தரீக்காக்கள் அல்ல

பகுதாத் நகரத்தின் பூங்காவனமாக அமைந்து விட்டிருந்த ஹழ்ரத் குத்புல் அக்தாப் முஹியித்தீன் அப்துல் காதிர் ஜீலானி(ரலி)அவர்களின் ரவ்ழா ஷரீப் முன் தலை கவிழ்ந்த நிலையில் நின்றிருந்தார் ஹழ்ரத் க்வாஜா முயீனுத்தீன் ஜிஸ்தி என்னும் இளவல். இரு விழிகளை மூடி விவேகத்தின் பார்வையைத் திறந்து ஹழ்ரத் குத்பு நாயகத்தோடு உசாவிக் கொண்டிருந்தார்கள். இரவின் போர்வையில் உலகம் உறங்கிக் கிடந்தது. “மைந்தரே! ஹிந்த் என்னும் நாட்டிற்கு நீர் அனுப்பப்படுவதின் அவசியத்தை நீர் அறிந்தீரா? அருமை நாயகம்(ஸல்)அவர்கள் தங்களுடைய சன்னிதானத்தில் நற்செய்திகள் […]

Continue reading


கௌதுகள் நாயகம் தங்கள் குருவிடமிருந்து கிலாபத்தை பெற்றுக்கொண்ட அதிசய நிகழ்வு

அன்று இரவு கான்கா கோலாகோலம் கொண்டிருந்தது. சீடர்கள், கலீபாக்கள், அந்நாட்டு அரசர்கள், பொதுமக்கள் புடை சூழ அமர்ந்த ஹழ்ரத் ஸெய்யதினா அபூ ஸய்யீது முபாரக் மஃஜூமி(ரலி)அவர்கள் அண்ணல் கௌஸுல் ஆலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ(ரலி)அவர்களி தன் அருகிலமர்த்திக் கொண்டு அகமியமான சொற்பொழிவு நிகழத்தினார்கள். அருள்மறை வசனங்களுக்கு அவர்கள் அளித்த புதிய பொருள் விளக்கத்தை கேட்டு மக்கள் திகைப்பிலாழ்ந்தார்கள். ஹழ்ரத் அபூ ஸய்யீத் முபாரக் மஃஜூமி(ரலி)அவர்கள் தங்கள் அகமிய உரையை நிறைவு செய்து. கலீபாக்களையும், சீடர்களையும், பொதுமக்கள்களையும் […]

Continue reading